மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

நாமக்கல், செப்.17: நாமக்கல்லில், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 155 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த முகாமை, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். முகாமில் பார்வையின்மை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, குள்ளத்தன்மை, அறிவுத்திறன் குறைபாடு, மனநோய், புற உலக சிந்தனை குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், மூளை நரம்பு சார்ந்த குறைபாடு மற்றும் ஆசிட் வீச்சால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது.

முகாமில், 155 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். இதில் 10 ேபருக்கு உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டையும், 16 பேருக்கு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டன. மேலும் ஒருவருக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் குமார், உதவி மாவட்ட திட்ட அலுவலர் பெரியண்ணன், வட்டார கல்வி அலுவலர் மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: