குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்

திருக்கழுக்குன்றம், செப்.17: குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருக்கழுக்குன்றம் தாலுகா குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  அப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 100க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ள மக்கள் செங்கல்பட்டு மற்றும் பூஞ்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை சீரமைக்க சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சமீப காலமாக திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடத்தில் பலமுறை தகவல் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனல், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: