காரிமங்கலம் பேரூராட்சியில் 50 லட்சத்தில் தார்சாலை

காரிமங்கலம். செப். 17: காரிமங்கலம் பேரூராட்சியில் 50 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. காரிமங்கலம்  பேரூராட்சியில் மந்தை வீதி முதல் அருணேசுவரர் மலைக்கோயில் வரை, கடந்த சில  ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக இருந்து வநதது. இதனால் அவ்வழியே  செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். சாலையை சீரமைத்து  தரும்படி, அப்பகுதி மக்கள், தமிழக உயிர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம்  மனு அளித்தனர். இதையடுத்து புதிய தார்சாலை அமைக்க, அமைச்சர் நடவடிக்கை  எடுத்தார். அதன்படி நபார்டு திட்டத்தின் கீழ் ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது. இதையடுத்து காரிமங்கலம் பேரூராட்சியில் புதிய தார்சாலை  அமைக்கும் பணி துவங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாள்  கேரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: