மாவட்டத்தில் சிறந்து செயல்பட்ட பள்ளிகளுக்கு கேடயம்

ஊட்டி, செப். 17: நீலகிரி மாவட்டத்தில் சிறந்து செயல்பட்ட பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2017-18ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளாக கோத்தகிரி ஒன்றியத்தில் அவ்வூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, குன்னூர் ஒன்றியத்தில் பேரட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, கூடலூர் ஒன்றியத்தில் பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று, 3 பள்ளிகளுக்கும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், இனிவரும் ஆண்டுகளிலும் பள்ளிகளில் மாணவர் ேசர்க்ைகயை அதிகரித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் தமிழ்நாடு மின் விசை மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வருமானம் ஈட்டும், தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த கால வைப்பு பத்திரங்கள் மேலூர் ஒசஹட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் பயிலும் துளசிமணி, தங்கமணி ஆகிய இரு மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: