ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்ட நிதி

ஊட்டி, செப். 17: தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் நலிவடைந்த ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காக ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்திற்கான கசோலையை கலெக்டர் வழங்கினார்.   ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை உரிய துறை அதிகாரிகளிடம் அளித்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து, கூடலூர் அருகேயுள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் நலிவடைந்த ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காக கோடை விழாவின் போது, இன்னிசை கச்சேரி மூலம் பெறப்பட்ட ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 600க்கான கசோலையை தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் வேணுகோபாலிடம் வழங்கப்பட்டது.   இக்கூட்டத்தில், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்ணன், உதவி ஆணையர் (கலால்) பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குருசந்திரன், பிற்படுத்தப்பட்ேடார் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா மற்றும் அரசுத்துறை அலுலலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: