வலங்கைமான் அருகே ரகுநாதபுரத்தில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைப்பு

வலங்கைமான்,செப்.17: வலங்கைமான் அடுத்த ரகுநாதபுரம் பகுதியில் கடந்த ஓராண்டிற்கு மேலாக சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அரித்துவாரமங்கலம்-சந்திரசேகரபுரம் சாலையில் ரகுநாதபுரம் பகுதியில் வெட்டாறு பாலம் அருகே சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் சாய்ந்தவாறு மின்கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால் மின் கம்பிகள் மிக அருகில் கைக்கு எட்டிய உயரத்தில் செல்கின்றது. இவ்வாறு தாழ்ந்த நிலையில் மின் கம்பம் கடந்த ஓராண்டிற்கு மேலாக உள்ளது என்பது குறிப்பிட தக்கது.

எனவே பெரும் அசாம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த செய்தி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இது குறித்த தகவல் வலங்கைமான் தாசில்தாரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தாசில்தார் இஞ்ஞாசிராஜ் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு தினகரனில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டுமென செய்தி வந்துள்ளது என்றும் மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் தினகரன் செய்தி எதிரொலியாக மின் கம்பம் சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தினகரன் நாளிதழ் மற்றும் தாசில்தார், மின்வாரிய அலுவலாகள், பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: