மன்னார்குடி அருகே வாஞ்சியூரில் 2 ஆண்டாக பூட்டி கிடக்கும் நூலகம் நிரந்தர நூலகரை நியமன செய்ய மக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, செப். 17: மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் கிராமத்தில் உள்ள கிராமப்புற நூலகத்தில் பணியாளர் இல்லாததால் 2 வருடங்களாக பூட்டி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நிரந்தர நூலகரை நியமன செய்ய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாஞ்சியூர் மற்றும் அதன் சுற்று புற கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2011 ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வாஞ்சியூரில் கிராமப்புற நூலகம் ஒன்று சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த நூலகம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

200 க்கும் மேற்பட்ட வாசகர்கள் கொண்ட இந்த நூலகத்தில் சுமார் ரூ. 3லட்சம் மதிப்பிலான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆனால் நூலகத்தை பராமரிக்க இதுவரை நிரந்தர நூலகர் நியமிக்கப் பட வில்லை. அவ்வப்போது குறைந்த ஊதியத்தில் தற்காலிக பகுதி நேர நூலகர்கள் நியமனம் செய்யப்படுவர். அவர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப் படா ததால் சில மாதங்கள் மட்டுமே பணியில் இருந்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கடந்த 2 வருடங்களாக வாஞ்சியூரில் உள்ள கிராமப்புற நூல கம் பூட்டியே கிடக்கிறது. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நூலகத்திற்கு நிரந்தர பணி யாளரை நியமித்து நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடன் திறந்து விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: