முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகத்தில் ரூ.22 லட்சத்தில் துவங்கிய பாலம், மதகு தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நிறைவு விவசாயிகள் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை, செப்.17: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகத்தில் ரூ.22லட்சம் மதிப்பீட்டில் பாலம், மதகு, தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் செல்லும் இடும்பாவனம் மரைக்காகோரையாற்றிலிருந்து பிரியும் தொண்டியகாடு பாசன வாய்க்கால் அப்பகுதி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமின்றி இப்பகுதி நிலத்தடிநீர் மட்டத்தையும் உயர்த்தி வருகிறது. இந்நிலையில் அதில் உள்ள மதகு, அதனை ஒட்டியுள்ள தடுப்புச்சுவர் சேதமாகியது. அதே போல் அதனை ஒட்டியுள்ள பிள்ளையார் குளம் போகும் வழிக்கென சாலையில் பாலம் இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.. இதனால் இப்பகுதியில் செல்லும் மரைக்கா கோரையாற்றிலிருந்து தண்ணீர; வருவதும் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் மற்றும் பாசன விவசாய சங்கத்தினர் இந்த மதகையும் தடுப்புச் சுவரையும் இடித்துவிட்டு புதியதாக கட்டித் தரவேண்டும், அந்த சாலைக்கு மினி பாலமும் கட்டித்தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 22லட்சம் செலவில் தொண்டியக்காடு பசன மதகு மறு கட்டுமானப்பணி, மற்றும் அப்பகுதி தடுப்புச்சுவர் அதேபோல் பிள்ளையார்குளம் போகும் வழிக்கென சாலையில் மினி பாலம் கட்டி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கட்டுமானப்பணி துவங்கியது. இந்தநிலையில் ஆறுகள் முறையாக தூர்வார படாததால் மேட்டூர்அணையில் திறக்கப்பட்ட காவிரிநீர் கடைமடை பகுதிக்கு வராது என்று எதிபார்த்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைமடை பகுதியான இப்பகுதி மரைக்காகோரையாற்றில் காவிரிநீர்வந்து சேர்ந்தது. தற்பொழுது மரைக்காகோரையாற்றில் காவிரிநீர் கடல்போல் தேங்கி நிற்கிறது.

இதனை இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் வகையில் இந்த பகுதிக்கு காலத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் மேற்கண்ட மதகு, தடுப்புச்சுவர் பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 90சதவீதம் பணிகள் நிறைவு பெறும் தருவையில் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த பணியை இதனை அப்பகுதி பாசன விவசாய சங்க தலைவர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர் ராமலிங்கம் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர். மேலும் கட்டுமான பணி முழுமையாக நடந்து முடிந்த மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தண்ணீரை பல்வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டனர்.

Related Stories: