பொதுமக்கள் கோரிக்கை பொன்னமராவதி பகுதியில் டெங்கு பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

பொன்னமராவதி,செப்.17: பொன்னமராவதி பகுதியில் டெங்கு பாதிக்கப்பட்ட இரண்டு கிராமங்களில் தினகரன் செய்தி எதிரொலியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். டெங்கு பாதிக்கப்பட்ட கிராமங்கள் என்ற தலைப்பில் தினகரனில் செய்தி நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இயக்குனர் பரணிதரன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கண்டியாநத்தம் கிராமத்திற்கு சென்று டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். டெங்கு பாதித்தவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் உடல்நலம் குறித்து விசாரணை செய்தனர். இதில் டாக்டர் ரவிக்குமார் தலைமையில் நடமாடும் மருத்துவக்குழுவினர் பள்ளி, அங்கன்வாடி மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கதமிழ்செல்வன், சுகாதாரஆய்வாளர் தியாகராஜன், ராமலிங்கம் உட்பட பலர் பங்குபெற்றனர். இதே போல வேந்தன்பட்டியில் மாவட்ட கொல்லை நோய் அலுவலர் சுலைமான் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலைச்சிவபுரி அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அருன்குமார், சுகாதார ஆய்வாளர் உத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தினகரன் செய்தி எதிரொலியாக டெங்கு பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு அதிகாரிகள் உடனே சென்று நடவடிக்கை எடுத்ததால், கிராம மக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: