கோடியக்கரை சரணாலயத்துக்கு மேலும் 5 மான்கள் வந்தன சித்தமல்லி வீரனார் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை, செப்.17: சித்தமல்லியில் நடைபெற்ற வீரனார் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி; கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரனார் ஆலயம். உள்ளது. இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 13ம்தேதி விக்னேஷ்வர அனுக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.

தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நேற்றுநிறைவடைந்து, மஹா பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆலய கமிட்டி பழனிச்சாமி, மற்றும் பாஜக வெங்கடேசன், கோவிசேதுராமன், நாஞ்சில்பாலு, மோடிக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: