திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் தஞ்சை சிவங்கை பூங்காவில் இருந்து

வேதாரண்யம்,செப்.17: தஞ்சை சிவங்கை பூங்காவில் இருந்து கோடியக்கரை சரணாலயத்துக்கு மேலும் 5 மான்கள் கொண்டுவரப்பட்டன. இது வரை 32 மான்கள் வந்துள்ளன. தஞ்சை பெரியகோயில் அருகில் சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்குள் ஒரு பகுதியில் 41 மான்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது தஞ்சை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விரிவுப்படுத்தப்படுவதால் சிவகங்கை பூங்காக்குள் உள்ள மான்களை அங்கிருந்து கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் விடப்படுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 27 பெண் புள்ளி மான்களும், ஒரு ஆண் புள்ளி மானும் பாதுகாப்புடன் வாகனத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலய மையப்பகுதியான யானைபள்ளம் பகுதிக்கு இரண்டு முறையாக கொண்டு வந்து விடப்பட்டன. நேற்று தஞ்சை நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் நான்கு ஆண் மான்களும் ஒரு பெண் மான் உள்ளிட்ட ஐந்து மான்கள் கொண்டு வந்து விடப்பட்டன.

25 ஆண்டுகளுக்கு முன்பு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு ஆண் மற்றும் பெண் மான் சிவகங்கை பூங்காவிற்கு கொண்டு சென்றாதாகவும் அது தஞ்சை சிவகங்கை பூங்காவில் வளர்ந்து தற்போது 41 மான்களாக பெருகி உள்ளது என கோடியக்கரையில் உள்ள இயற்கை ஆர்வலர் சித்ரவேலு தெரிவித்தார். இந்த 41 மான்களும் தங்களின் பூர்வீக இடமான கோடியக்கரைக்கு தற்போது வந்து சேர்ந்துள்ளது.

தஞ்சையிலிருந்து வாகனத்தில் கொண்டு வந்து வனப்பகுதியில் திறந்து விடப்பட்டவுடன் பூர்வீக இடத்திற்கு வந்த மகிழ்சியில் மான்கள் துள்ளி குதித்து காட்டுக்குள் சென்றன. மற்ற ஒன்பது மான்களும் விரைவில் கொண்டு வந்து விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: