பொதுமக்கள் கலெக்டரிடம் மனு மயிலாடுதுறை அருகே அரசு ஆதிதிராவிட நல பள்ளிக்கு புதிய கட்டிடம்

மயிலாடுதுறை, செப்.17: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள மணக்குடி அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது, இப்பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் இல்லை என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர், இந்நிலையில் ரூ.24 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.இத்திறப்பு விழாவின்போது அப்பகுதி மக்கள் புதிய வகுப்பறைக்குத் தேவையான பீரோ, பெஞ்ச், நாற்காலி, டேபிள், மேஜை மற்றும் அலமாறி, தண்ணீர் டிரம் போன்றவற்றை அளித்தனர். மேலும் அப்பகுதி பெண்கள் தாம்பாளத்தில் பூ பழங்களை எடுத்துச் சென்று புதிய பள்ளி வகுப்பறைக்கு கொண்டு சென்றனர்.

இவ்விழாவில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ஆதிதிராவிட நலத்துறை துணை கலெக்டர், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பள்ளியை எக்காரணத்தை கொண்டும் மற்ற பள்ளியுடன் இணைக்கக் கூடாது என்றும் தனி பள்ளியாகவே இருக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். நிச்சயம் இந்த பள்ளி தனிப்பள்ளியாகவே தொடரும் என்றும் இப்பள்ளியை எக்காரணத்தை கொண்டும் இடம் மாற்றவோ மூடவோ நடவடிக்கை எடுக்கப்படாது என்று எம்எல்ஏ உறுதி அளித்தார்.

Related Stories: