வாக்காளர் பட்டியலை திருத்த ஹெல்ப் லைன் அறிமுகம் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு கரூரில் கலெக்டர் அன்பழகன் துவக்கி வைத்தார்

கரூர், செப். 17: இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விபரங்களை வாக்காளர்களே சரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வோட்டர்ஸ் ஹெல்ப்¬லைன் என்ற கைபேசி செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதி நவீன மின்னணு வாகனம் மூலம் ஒளிபரப்பும் நிகழ்வினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேரூந்து நிலையங்கள், சந்தைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் என்ற கைபேசி செயலி குறித்து விளக்க படங்களை ஒளிபரப்பவும், துண்டு பிரசுரங்களை வழங்கவும் மாவட்ட கலெக்டர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்ட செயலி குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பின்னர் இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் என்ற நோக்கத்துடன் செப்டம்பர் 1ம்தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு முகா£ர் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இது செப்டம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி, வாக்காளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்க்க தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, புகைப்படம், பாலினம் போன்ற விபரங்களை வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் என்ற கைப்பேசி செயலி மூலம் சரி பார்க்கலாம். மேலும், விடுபட்ட வாக்காளர்கள் எதிர்கால வாக்காளர்கள், இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்களின் விபரங்கள் மற்றும் வாக்குச்சாவடி குறித்த ஆலோசனைளும் இந்த செயலியில் சேகரிப்படும். வாக்காளர் விபரங்களை சரிபார்ப்பதற்கு நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்டல் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் என்ற கைபேசி செயலி மூலமாகவோ அல்லது 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணை அழைப்பதன் மூலமாகவோ, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தை அணுகுவதன் மூலமாகவோ வாக்காளர் பட்டியலில் தங்களது விபரங்களை சரி செய்து கொள்ளலாம்.

அக்டோபர் 15ம்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெளியிடப்படும். வாக்காளர்கள் அதனையும் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும், 2020 ஜனவரி 1ம்தேதி அன்று 18வயது பூர்த்தியடையும் நபர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும் வாக்குச்சாவடி மைய அலுவலரிடம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவை தொடர்பாக படிவங்கள் சமர்ப்பிக்கலாம்.

மேலும், நவம்பர் 2, 3 மற்றும் 9, 10 ஆகிய விடுமுறை தினங்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு மனு அளிக்கலாம். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 2020 ஜனவரி 1ம்தேதி முதல் 15ம்தேதிக்குள் ஆணையம் தெரிவிக்கும் நாளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இந்த திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, தேர்தல் தாசில்தார் பிரபு உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Stories: