கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தூவும் சமூக சேவைப்பணி

கரூர், செப். 17: கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள், இன்கிளைன் டிரெய்னர்ஸ் அமைப்பு இணைந்து விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் ஒன்றே மனிதனின் சுவாசம், இயற்கை அழிவுகளில் இருந்தும், நச்சு காற்றில் இருந்தும் நம் சுவாசத்தை மீட்டெடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். நாளைய பூமி பந்தின் அடையாளமான மழை, மரம், மனிதம் மலர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் 3500 விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டன.

தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் பத்மநாபன் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர் அனிதா ஆகியோர் வழிகாட்டுதலின்படி 75 மாணவர்களால் பள்ளியில் இருந்து 30கிமீ தூரம் வரை விதைப்பந்துகள் தூவப்பட்டன.ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் விதைப்பந்து தூவிச் சென்றதை அனைத்து தரப்பு மக்களும் பார்வையிட்டு வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: