பூதப்பாண்டி அருகே பரபரப்பு எஸ்டேட்டில் வெடிபொருள் ெவடித்து காவலாளி பலி

பூதப்பாண்டி, செப். 17: பூதப்பாண்டி அருகே தனியார் எஸ்டேட்டில் காட்டு பன்றியை கட்டுப்படுத்த வைத்த வெடிபொருள் வெடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார். குமரிமாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த தேவகிரி பகுதியில் ஒரு தனியார் எஸ்டேட் உள்ளது. அதில் ஏலம், கிராம்பு, நல்லமிளகு மற்றும் ரப்பர் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்டேட்டில் செங்கன்குடிவிளையை சேர்ந்த கோலப்பன் (85) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கோலப்பன் எஸ்டேட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, கோலப்பன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடலில் தீ காயம் இருந்தது. வலது கை சிதைந்திருந்தது.

எஸ்டேட்டில் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கோலப்பன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி எஸ்.ஐ மாரிச்செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில், எஸ்டேட் பகுதியில் காட்டுபன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வெடிபொருட்கள் ஆங்காங்கே வைத்திருந்தது தெரிய வந்தது. வெடிப் பொருட்களை கோலபன் எஸ்டேட்டில் ஆங்காங்கே வைத்த போது அது வெடித்து சிதறியது தெரிய தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: