ஏர்வாடியில் காவல் நிலையம் முற்றுகை

ஏர்வாடி, செப். 17: ஏர்வாடி அராபாத் நகரைச் சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணிற்கும், எல்என்எஸ் புரத்தைச் சேர்ந்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஓராண்டு முன்பு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் அவர் அராபாத் நகரில் உள்ள அந்த பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். நேற்று  அப்பகுதி இளைஞர்கள் அவரை தடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே அப்பெண் ஏர்வாடி போலீசில், அராபாத் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் உட்பட 11 பேர் தன்னை அவதூறாக பேசியும், தனது கணவரை தாக்கியதாகவும் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ ஆதம்அலி, நேற்று 11 பேர் மீது வழக்கு பதிந்து ஜாகீர் உசேனை கைது செய்தார்.

இதை கண்டித்து நேற்றிரவு ஏர்வாடி ஜமாத்தார் மற்றும் அனைத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோவன், ஜமாத்தார் 4 பேரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், மற்றவர்கள் கலைந்து செல்லுமாறும் கூறினார். இதையடுத்து அனைவரும் பள்ளிவாசலில் பொதுவாக பேசி முடித்த பிறகு காவல் நிலையத்திற்கு வருவதாக கூறி கலைந்து சென்றனர்.

Related Stories: