விவசாயிகள் நலன் கருதியே பால் விலை உயர்வு

மார்த்தாண்டம், செப். 17: மார்த்தாண்டத்தில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: அந்நிய நாட்டு மொழி நமக்கு இணைப்பு மொழியாக இருப்பதைவிட, நம் நாட்டிலேயே பேசப்படும் ஒரு மொழி இணைப்பு மொழியாக இருக்குமானால் வெளிநாடுகளில் அதன் அடையாளம் அதிகரிக்கும் என்று அமித்ஷா கூறியதில் என்ன தவறு இருக்கிறது. இதில் எங்கே இருக்கிறது திணிப்பு. இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள் நமக்கு பலவீனமல்ல. அதுவே நமது பலம். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் விவசாயிகளின் கஷ்டங்களை கருத்தில் கொண்டே பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது கடந்த 1950ல் இருந்தே பராமரித்து வந்திருக்க வேண்டும்.

இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. உரிய ஆவணங்களின்றி யார் வேண்டுமானாலும் வந்து செல்ல நாடு என்பது சத்திரமல்ல. புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். சாலை விதிகளை கடைபிடித்து செல்பவர்களிடம் யாரும் அபராதம் விதிப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: