விதிமுறைகளை மீறி இயக்கிய 17 ஆட்டோக்கள் பறிமுதல்

மார்த்தாண்டம், செப். 17: கருங்கல், பாலூர், பூக்கடை, திக்கணங்கோடு, கோழிப்போர்விளை போன்ற பகுதிகளில் அனுமதியின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார், கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி மற்றும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் தகுதி சான்று இல்லாத 10 ஆட்டோக்கள், அனுமதி சீட்டு இல்லாத 3 ஆட்டோக்கள், பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றி சென்ற 4 ஆட்டோக்கள் உட்பட மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை கோழிப்போர்விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆட்டோவுக்கும் ரூ. 500 முதல் ரூ. 2500 வரை அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பின்னர் அவை விடுவிக்கப்படும் எனவும், பள்ளி குழந்தைகளை அனுமதித்ததை விட அதிகமாக ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Related Stories: