ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

நெல்லை, செப். 17: சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர் மன்றம் சார்பில் ‘‘அட்வான்ஸ் டேட்டா வேர்ஹவுசிங் கான்செப்ட் அன்ட் டீம் பில்டிங் ஆக்டிவிட்டிஸ்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாணவி ஜெனோவா வரவேற்றார். மாணவி அஸ்வினி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு டாடா கம்யூனிகேஷன்ஸ் லிட் சீனியர் லீட் இடிஎல் டெவலபர் பாஸ்கர் சுப்பையா கலந்து கொண்டு பேசுகையில், டேட்டா வேர்ஹவுசிங் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் குழு விளையாட்டுகளை மாணவர்களுக்கு நடத்தினார். தொடர்ந்து சமூக வலைதளங்களின் பயன்பாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர் கோமதி ராஜாசங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் முத்து கண்ணன், ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: