போக்குவரத்துக்கு லாயக்கற்ற மைலப்புரம் சாலை சீரமைக்கப்படுமா?

கடையம், செப். 17: பாப்பான்குளம் அடுத்த மைலப்புரம் சாலையை சீரமைக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மைலப்புரம் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மைலப்புரத்தில் இருந்து கடையம் - நெல்லை மெயின்ரோட்டுக்கு செல்லும் சுமார் 2 கிமீ சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது.

இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இரவு நேரத்தில் இந்த வழியாக சைக்கில் மற்றும் மோட்டார் பைக்கில் வருபவர்கள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். பாப்பான்குளம் சாலையை பேராமணி, மலையான்குளம், மைலப்பபுரம் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் மக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: