கீழமங்கலத்தில் அடிப்படை வசதி

தூத்துக்குடி, செப். 17:  ஓட்டப்பிடாரம்  தாலுகா கீழமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள்  கட்சியின் மாவட்டத் தலைவர் தாசு தலைமையில் கத்தார்பாலு, வீரசமர், சுடலைமணி, கண்ணன்,  கருப்பசாமி உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள்  பகுதியில் 50க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாய  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருப்பினும் அடிப்படை வசதிகளான குடிநீர்,  தெருவிளக்கு, சாலை மற்றும் சுகாதாரம் போன்ற எந்தவித வசதிகளும் சரிவர செய்து  தரப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும்  பெரியவர்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

 எனவே, இங்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்துதர வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச  வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். இதே போல் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கைகள் சிலர் கொடுத்துள்ள மனுவில், ‘‘நாங்கள் வாடகை  வீட்டில் வசித்து வருகிறோம். எங்களிடம் வாடகை அதிக அளவில்  வசூலிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கு  தருவைகுளம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உதவ வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

Related Stories: