வாலாஜா அரசு மகளிர் கல்லூரி விழா எதிர்கால சவால்களை சமாளிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எம்பி கனிமொழி பேச்சு

வாலாஜா, செப். 17: எதிர்கால சவால்களை சமாளிக்க மாணவிகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என வாலாஜா அரசு மகளிர் கல்லூரி விழாவில் பேசிய எம்பி கனிமொழி கூறினார்.வேலூர் மாவட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று காலை நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கிடையே, ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹15 லட்சம் மதிப்பில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கான நுழைவு வாயில் கட்ட எம்பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: பெண்கள் கல்வி கற்பதன் மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எனவே, மாணவிகள் எதிர்கால சவால்களை திறமையுடன் சமாளித்து உன்னதமான இடத்தை அடைய வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சியை கல்லூரி நாட்களில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றை காத்திட நாம் முன்வர வேண்டும். தாய்மொழியுடன் உலகளவில் போட்டிப்போடுவதற்கு ஆங்கில மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களின் திறமையான ஆங்கில அறிவால் தான் சிலிக்கான் பள்ளத்தாக்கே நம்மவர்கள் பிடியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி(ராணிப்பேட்ைட), ஈஸ்வரப்பன்(ஆற்காடு), கல்லூரி முதல்வர் க.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி கனிமொழி பேசுகையில், ‘ஊர் பொதுமக்களே சேர்ந்து திமுக அலுவலகம் கட்டுவதற்கு நன்றி. இந்த அலுவலகத்தில் ஒரு பகுதி நூலகமாக மாற்றப்படும். அதற்கான புத்தகங்களை நான் வழங்குகிறேன். நூலகத்தை எதிர்கால தலைமுறையினர் சிறப்பாக பயன்படுத்தி தமிழ் பண்பாட்டையும், தமிழகத்தையும் காப்பற்ற வேண்டும்’ என்றார்.

பொன்விழா காணும் வாலாஜா அரசு கல்லூரி

கடந்த 1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி இந்த கல்லூரியை தொடங்கி வைத்தார். தற்ேபாது 50 ஆண்டுகளை கடந்து பொன்விழாவை கொண்டாடும் நிலையில் உள்ளது. இதற்கான நுழைவாயில் அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி கலந்துகொண்டது சிறப்பம்சம் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் பொன்விழா நுழைவாயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசினார். உடன், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஈஸ்வரப்பன்.

Related Stories: