நெல்லையில் முதலியார், பிள்ளைமார் சங்க தொழிலதிபர்கள் கூட்டம்

நெல்லை, செப். 15: நெல்லையில் சர்வதேச முதலியார், பிள்ளைமார் (இம்பா) சங்கங்களின் தொழிலதிபர்கள் கூட்டம் நடந்தது.  முதலியார், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களை இணைக்கும் முயற்சியாக சர்வதேச முதலியார், பிள்ளைமார் சங்கம் (இம்பா) என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தொழிலதிபர்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ள ‘பிசினஸ் டூ பிசினஸ்’ (பிடூபி) அமைப்பின் கூட்டம் நெல்லை ஆர்ஆர் இன் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் நிர்வாகக் குழு உறுப்பினர் பொன்ராஜ் வரவேற்றார். இம்பா அமைப்பின் சேவைகள் குறித்து அமைப்பு செயலாளர் ரவி பிள்ளை பேசினார். பிடூபி அமைப்பின் நோக்கம் குறித்து அப்பு சந்திரசேகர் பேசினார். பொதுச்செயலாளர் ரகுராம் அமைப்பின் வளர்ச்சிகள் குறித்து பேசினார்.

இம்பா நிறுவனர் மற்றும் தலைவர் அருணாச்சல முதலியார், ஐக்கிய அரபு நாடுகள் டெக்டான் குழும நிர்வாக இயக்குநர் லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். விழாவில் பிடூபி அமைப்பின் உறுப்பினர்கள் தகவல் கையேடை டெக்டான் குழும நிர்வாக இயக்குநர் லட்சுமணன் வெளியிட நெல்லை சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். நெல்லை அமைப்பின் பணிகள் குறித்து பிடூபி நெல்லை தலைவர் மாரியப்பன் விளக்கினார். சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: