கெங்கவல்லி பகுதியில் கனமழை வறண்டு கடந்த சுவேத நதியில் தண்ணீர் பெருக்கெடுத்தது

கெங்கவல்லி, செப்.15:  கெங்கவல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் வறண்டு கடந்த சுவேத நதியில் தண்ணீர் பெருக்கெடுத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கெங்கவல்லி, வீரகனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால், வறண்டு கிடந்த சுவேத நதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பருவமழை பொய்த்தால் சுவேத நதியில் தண்ணீர் வரத்தின்றி காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக்கொண்டு சாகுபடி பணிகளை தொடங்க ஆர்வமாக உள்ளோம் என்றனர்.

Related Stories: