நாமக்கல் மாவட்டத்தில் திமுக இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாமக்கல், செப்.15: நாமக்கல்லில் திமுக இளைஞர் அணி சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் முகாமை துவக்கி வைத்து, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார். இதற்கு நகர பொறுப்பாளர் ராணா.ஆனந்த் தலைமை வகித்தார். சட்டதிருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செல்வமணி, ரமேஷ் அண்ணாதுரை, மணி, சரோஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், துணை அமைப்பாளர்கள் தினேஷ், வினோத், அரவிந்த், சிலம்பரசன், கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம் நகரத்தில், திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திசெல்வன் முகாமை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘கிழக்கு மாவட்டத்தில் இலக்கை விட அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக தெரியவில்லை. எனவே, இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு மாற்றத்தை கொண்டு வர ஆர்வத்துடன் செயல்படவேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இலக்கிய அணி ரங்கசாமி, வர்த்தக அணி அருள், நத்தகுமார்,  நகர இளைஞரணி கார்த்திக், நகர நிர்வாகிகள் அமிர்தலிங்கம், நாகேஸ்வரன், ஆனந்த், ரவிச்சந்திரன், மற்றும் ஓபுளிமோகன், ஆசைதம்பி, சலீம்,  மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், நாமகிரிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி சார்பில்,  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர்கள் ரமேஷ்குமார், சுரேஷ், வில்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் பேரூர் செயலாளர் அன்பழகன், செல்வராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஒன்றியம் அக்கியம்பட்டி ஊராட்சியில், திமுக இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்தி செல்வன் கலந்து கொண்டு, 100க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்த்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிர்வேல், பேரூர் செயலாளர் நடேசன், மகளிரணி அமைப்பாளர் ராணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், நிர்வாகிகள் பெரியசாமி, பிரபாகரன், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: