மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி நிறைவு விழா

திருச்செங்கோடு, செப்.15: மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் குறித்த சிறப்பு பயிற்சி நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் பாரத்குமார் தலைமை வகித்தார். இன்டெல் நிறுவன இந்திய பிரிவு தலைமை அலுவலர் அகன்ஷா பிலானி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு கற்பதன் மூலம் பேச்சு அங்கீகாரம், கற்றல், திட்டமிடல், சிக்கலை தீர்ப்பது, பொருட்களை கையாளுதல் உள்ளடக்கிய திறன்களை கம்யூட்டர் பயிற்சிகளை செய்ய முடியும்.

இதில் கைதேர்ந்தவர்கள் எதிர்நோக்கி வரும் கணிணி துறைசார் நிறுவனங்களில் அதிகமாக வேலைவாய்ப்புகளை பெறலாம். இந்த திறன்களை மேம்படுத்தவும், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இடைவெளியை ஒருங்கிணைக்கவும், இது போன்ற திறன் வளர்ச்சி சிறப்பு மையங்கள் உதவும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற  40 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், பெங்களூரு நெக்ஸ்ட் வெல்த் எண்டர்பிரைசஸ் நிறுவனர் ஸ்ரீதர் மிட்டா, கல்லூரி செயல் இயக்குநர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர் மஹேந்ர கவுடா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: