விழிப்புணர்வு முகாம்

வேப்பூர், செப். 15:   கடலூர் எஸ்பி அபிநவ் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் தரன் உத்தரவின்பேரில் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் அருகே உள்ள வடபாதி கிராமத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், கள்ளச்சாராயம் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் தீங்கை பற்றி பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கிராமத்தை பூரண மதுவிலக்கு கிராமமாக மாற்றுவோம் என விருத்தாசலம் மதுவிலக்கு ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவலர்கள் துரைமுருகன், ராஜ்குமார், ரவிச்சந்திரன், குழந்தைவேல், சுகுமார், சுரேஷ் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஐயம்பெருமாள், ஊராட்சி  செயலர் செல்வராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: