மர்மகாய்ச்சல் எதிரொலி கணக்கெடுக்கும் சுகாதாரத்துறை

தேவாரம், செப்.15: தேவாரம் பகுதிகளில் திடீரென ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் இப்போது வித்தியாசமான காலநிலை உண்டாகி உள்ளது. திடீர், திடீர் என பருவநிலை மாற்றங்கள் உண்டாகி உள்ளது. குளிர், வெப்பம், மழை, ஈரமான காற்று என மாறி மாறி மாற்றங்கள் உண்டாகி உள்ளது. காலையில் ஈரக்காற்று அடிக்கிறது. பகலில் வெப்பம் கொளுத்துகிறது. மாலை நேரத்தில் லேசான சாரல் பெய்யும் சூழல் உள்ளது.

இதனால் மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகி காய்ச்சல், சளி, போன்ற பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. எனவே தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தினந்தோறும் கணக்கெடுத்து வருகின்றனர். சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, முதியவர்கள், பெண்கள் யாரும் காய்ச்சலால் இங்குள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றனரா என கணக்கெடுக்கின்றனர்.

பேரூராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள மஸ்தூர்கள் மூலமாக காய்ச்சல் கணக்கெடுப்பும் நடக்கிறது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட சுகாதாரத்துறை அதிகாரிகள் அட்வைஸ் தருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `` காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதா என்பதை சுகாதாரத்துறையினர் வழக்கமாக கணக்கெடுத்தாலும் இன்றைய காலநிலை மாற்றம் காரணமாக அதிகமான ரிஷ்க் எடுத்து கணக்கெடுக்கிறோம்’’ என்றனர்.

Related Stories: