கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

உத்தமபாளையம், செப்.15: கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஜாகீர்உசேன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கம்பம் மணிக்கட்டி ஆலமரம், தேவாரம் சாக்குலூத்துமெட்டு, போடிமெட்டுசாலை பஸ்நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் தலைச்சுமையாக வந்தவர்கள் அரிசி மூடைகளை போட்டுவிட்டு தப்பினர்.

இதனை அடுத்து 18 சிப்பங்களில் இருந்த சுமார் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தியவர்கள் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் அனைத்தும் உத்தமபாளையம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது பற்றி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: