போலி நகையை அடமானம் வைத்து ரூ.1.60 லட்சம் மோசடி பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு

தேனி, செப். 15: தேனியில் உள்ள யூகோ வங்கியில் கிளை மேலாளர் கவுரிசங்கர், எஸ்.பி பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தார். அதில், தேனி கிளை யூகோ வங்கியில் கடந்த ஆண்டு ஜன.31ம் தேதி தேனி வ.உ.சி தெருவை சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகசெல்வி(49) வங்கி சேமிப்புக் கணக்கை துவங்கினார். பின் தனது 80 கிராம் எடையுள்ள பத்து பவுன் நகைகளை அடமானமாக வைத்து ரூ.1 லட்சத்தி 40 ஆயிரம் கடன் பெற்றார். ஒரு வருட காலமாக நகையை திருப்பாமலும், நகைக்கான வட்டியை செலுத்தாமலும் கற்பகவள்ளி இருந்தார். நகைக்கான வட்டி செலுத்த கடிதம் அனுப்பிய கடிதம் பதில்இல்லாமல் வங்கிக்கு திரும்பி வந்தது.

இதனையடுத்து, நகையை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி,நகையை சோதித்தபோது, கற்பகவள்ளி அடமானம் வைத்த நகைகளில் சில போலீயானவை எனவும் வளையல்கள் மச்சம் குறைந்தவையாக இருந்ததும் தெரியவந்தது. இதன்மூலம் கற்பகவள்ளி அடமானக்கடனாக வாங்கிய தொகை ரூ.1.40லட்சத்துடன் வட்டி சேர்த்து ரு.1 லட்சத்து 60 ஆயிரத்து 636 நஷ்டம் ஏற்படுத்தியது தெரியவந்தது என புகார் மனுவில் தெரிவித்தார்.

இதன் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு பரிந்தரைத்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி நகைகளை அடமானம் வைத்ததாக கற்பகவள்ளி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: