ஆசிரியர் நியமிக்காவிட்டால் போராட்டம் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் முடிவு

தொண்டி, செப். 15: தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் நேற்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் நியமிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது எல்கேஜி வகுப்புகளும் துவங்கப்பட்டுள்ளது. இதிலும் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

 5 வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர் மட்டும் இருந்தால் மாணவர்களின் கல்வி எவ்வாறு உயரும். இதனால் நேற்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூடுடம் தலைவர் அஹமது பாய்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும், உடனடியாக ஆசிரியர்களை நியிக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் நியமனத்தில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் பெற்றோர்கள் பேராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Related Stories: