திமுக., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்

ஈரோடு, செப். 15:  திமுக., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஈரோட்டில் நேற்று துவங்கியது.  திமுக., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி 60 நாட்களுக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டது. முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட தந்தை பெரியார் அண்ணா நினைவகம் முன் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நடந்த இம்முகாமை திமுக., இளைஞரணி மாநில துணை செயலாளர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், அந்தியூர் செல்வராஜ், சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார், குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் வரவேற்றார். ஈரோட்டை தொடர்ந்து ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய இடங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.  இதே போல ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தன. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.  இதில் இளைஞரணி அமைப்பாளர் சேகர், பவானி நகர செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஒரு தொகுதிக்கு 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 60 நாட்களுக்கு தொடர்ந்து இப்பணி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: