மாவட்டத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

தர்மபுரி, செப்.11: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகில் ரமானி பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள், நேற்று ஒருநாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தர்மபுரி வழக்கறிஞர் சங்கத்தலைவர் கருணாநிதி கூறுகையில், ‘சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகில் ரமானி பணியிட மாற்றம் குறித்து, ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முடிவு செய்தது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 13 நீதிமன்றங்களும், தாலுகா வாரியாக உள்ள நீதிமன்றங்கள் என மொத்தம் 25 நீதிமன்றங்களில், 700 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்,’ என்றார்.

Related Stories: