தர்மபுரி நகராட்சி பகுதியில் 1250 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

தர்மபுரி, செப்.11: தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட டவுன் பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், நேற்று நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தலைமையில், துப்புரவு ஆய்வாளர் ரமணசரண் மற்றும் கோவிந்தராஜன், சுசீந்திரன் உள்ளிட்ட பணியாளர்கள், பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள 21 மொத்த மற்றும் சில்லரை கடைகளில், திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட 1250 கிலோ பிளாஸ்டி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ₹40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், சேலம் மெயின்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, தெருவில் குப்பை கொட்டியதற்காக ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: