இருமத்தூர் ஆற்றில் 6 டன் மரச்சட்டங்கள் சேகரிப்பு

அரூர், செப்.11: விநாயகர் சதுர்த்தியையொட்டி இருமத்தூர் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டதில், 6 டன் மரச்சட்டங்கள் சேகரமாகின.  விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், அரூர் அருகே இருமத்தூர் ஆற்றில் கரைக்கப்பட்டன. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் விநாயகர் சிலைகள், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் வைக்கப்படும் மரச்சட்டகங்களுடன் ஆற்றில் விடப்படும். அவ்வாறு விடும் சிலைகள் கரைந்தபின் ஒதுங்கும் மரச்சட்டங்கள், சுமார் 6 டன் அளவுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் 2 இடங்களில் சேகரிக்கப்பட்டது. அதற்கென உள்ள குழுவினர் 2ம் தேதி முதல் நேற்று (10ம் தேதி) வரை சேகரித்து, பின்னர் அதனை ஓட்டல்கள், மரக்கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த மரச்சட்டங்கள் டன் ₹2500 என விற்கப்படுகிறது.

Related Stories: