விழுப்புரம் கிழக்குபாண்டி ரோட்டில் உள்ள புத்துவாழி மாரியம்மன் கோயிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

விழுப்புரம், செப். 11: விழுப்புரத்தில் புத்துவாழி மாரியம்மன்கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.விழுப்புரம் அருகே மகாராஜபுரத்தைச் சேர்ந்த விபிஎஸ் குருநாதன் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் கிழக்குபாண்டிரோடு, மகாராஜபுரத்தில் புத்துவாழி மாரியம்மன்கோயில் அமைந்துள்ளது. தற்போது சாலை விரிவாக்கப்பணிகளுக்காக கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் இதே சாலையில் உள்ள போக்குவரத்திற்கு நெருக்கடியாக உள்ள வீரவாழியம்மன்கோயில், அரசுமருத்துவமனை எதிரே உள்ள முருகன்கோயில் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெருக்கடிஇல்லாத சாலையில், அதிக இடவசதியுள்ள இடத்தில் அமைந்துள்ள புத்துவாழிமாரியம்மன் கோயிலை மட்டும் அகற்றுவது ஏன்?நேற்றுமுன்தினம் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் கோயிலை இடிப்பதற்காக அதிகாரிகள்வந்தபோது பொதுமக்கள் தடுத்துநிறுத்தினர். ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையினரிடம் அளித்த மனுவிற்கு எந்தவிதபதிலும் இல்லை. கோயில்பலதரப்பட்ட மக்களின் குலதெய்வமாக விளங்குவதால் கோயிலை அகற்றாமல் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமலும், பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையிலும் அங்குவந்த காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நெடுஞ்சாலை துறையினர் கொடுத்த கடிதத்தில் கையொப்பம் செய்தோம். எனவே மகாராஜபுரம் கிழக்குபாண்டிரோட்டில் அமைந்துள்ள புத்துவாழிமாரியம்மன் கோயிலை அந்த இடத்திலிருந்து அகற்றாமலிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: