குடியிருப்புகள், வணிக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் அமைக்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

திருச்சி, ஆக.22:  திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ரங்கம் கோட்டம் வடக்கு அடையவளஞ்சான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில் 99 வீடுகள், கிழக்கு அடையவளஞ்சான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 வீடுகளில் மேற்கூரையில் உள்ள மழைநீரை கினறு அமைத்து மழைநீரை சேமிப்பதை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதா எனக் கணக்கெடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகளிலும் கட்டயமாக அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்கும் முன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும், இல்லாத கட்டடங்களில் உடனடியாக அவற்றை அமைக்கவும், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், எதிர்வரும் பருவமழையால் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தும் விதமாக, அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் மாநகராட்சி மூலம் கடிதம் அனுப்பபட்டுள்ளது என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Related Stories: