நீர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

தா.பேட்டை, ஆக.22: தா.பேட்டை அடுத்த பிள்ளபாளையம் கிராமத்தில் வேளாண் மற்றும் சிறுகமணி வேளாண் அறிவியல் மையம் சார்பில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தா.பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கலைச்செல்வி தலைமை வகித்தார். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் வரகுணபாண்டியன் வரவேற்றார். சிறுகமணி வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர்ஜகான் முன்னிலை வகித்தார். முனைவர் தனுஷ்கோடி நீர் சிக்கனம் பற்றி பேசினார். நீர் குறைவாக தேவைப்படும் கம்பு, சோளம் போன்ற சிறுதானிய பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யும் முறைகள், மழை நீரை பண்ணை குட்டைகளில் சேமிப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. ரை நீரை சிக்கனமாக பயன்படுத்த மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் பிருந்தா, அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரசாத், சதிஷ்குமார் செய்திருந்தனர்.

Related Stories: