ஐகோர்ட் கிளை உத்தரவு மழைபெய்ய வேண்டி பூஜை

பேரையூர், ஆக. 22: பேரையூர் அருகே சாப்டூர்கேணி மலையடிவாரத்தில் மழை பெய்ய வேண்டி 22 கிராமமக்கள் யாகபூஜை செய்தனர். மதுரை பேரையூர் தாலுகா சாப்டூருக்கு 3 கி.மீ தொலைவில் சாப்டூர்கேணி உள்ளது. கடந்த 5ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டது. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியிலுள்ள 22 கிராம மக்கள் மழை பெய்ய வேண்டி யாகசாலை அமைத்து பூஜை நடத்தினர். நேற்றுமுன்தினம் முதல் நேற்றுவரை இரண்டுகால பூஜை நடைபெற்றது. அதில் யாகசாலை வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பச்சமலையப்பன், கருப்பசாமி, கிராமதெய்வம் மருதமரம், பச்சமலையம்மன், ஆகிய சாமிகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு 11 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது இந்த யாகசாலை பூஜைகளை பேரையூர் பட்டாச்சியர் கணேசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்த பூஜையில் 22 கிராமமக்களும் கலந்துகொண்டு வருண பகவானை வேண்டி வணங்கினர்.

Related Stories: