ஆடி பெருந்திருவிழா நிறைவு அழகர்கோவில் உண்டியல் திறப்பு

அலங்காநல்லூர், ஆக.22: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெற்றதையொட்டி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. மதுரை அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிபெருந்திருவிழா கடந்த வாரம் 17ம் தேதி நிறைவுபெற்றது. இதையொட்டி திருக்கல்யாண மண்டபவளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் 63 லட்சத்து 49 ஆயிரத்து 998ரூபாயும், தங்கம் 54 கிராமும், வெள்ளி 209 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தது. முன்னதாக ஆறாவது படைவீடு சோலைமலைமுருகன் கோயிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் அங்குள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

அதில் 11 லட்சத்து 65 ஆயிரத்து 214 ரூபாயும், தங்கம் 23கிராம், வெள்ளி 546 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் திறப்பின் போது கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் அய்யப்ப சேவா சங்கத்தினரும், திருக்கோயில்பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: