தாராபுரம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

தாராபுரம், ஆக. 22: தாராபுரத்தில் 41 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொத்தனாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

  தாராபுரம் அலங்கியம் சாலை அம்பேத்கர் நகரை ேசர்ந்தவர் கார்த்திகா, டாக்டர்.  இவர் தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் சொந்தமாக திருமண மண்டபம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் கார்த்திகாவின் வீட்டுக்கு வந்த வாலிபர் தனது பெயர் வெள்ளைச்சாமியை, தான் பெற்றோர் இல்லாத ஆதரவற்றவர். தனக்கு கட்டுமான வேலைகள் அனைத்தும் தெரியும். எனவே அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் கட்டுமான வேலை தருமாறு கேட்டுள்ளார்.

 இதனை அடுத்து அவருக்கு திருமண மண்டப கட்டுமான பணியில் கொத்தனார் வேலை அளித்தனர். மேலும் அவர் டாக்டர் கார்த்திகாவின் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, பீரோவை உடைத்து, 41 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து டாக்டர் கார்த்திகா தாராபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் கட்டிட தொழிலாளி வெள்ளைச்சாமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவின்பேரில், தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராம், இன்ஸ்பெக்டர்கள் வனிதா, கோபிநாத் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் வெள்ளைச்சாமியை நேற்று காலை ஈரோட்டில் கைது செய்து, தாராபுரம் அழைத்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் வெள்ளைச்சாமி டாக்டர் கார்த்திகா வீட்டிலிருந்து 41 பவுன் நகை, பணம் கொள்ளையடித்து தெரியவந்தது. மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஈரோட்டில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைதண்டனை முடிந்து வெளியே வந்தது தெரியவந்தது.  இவர் மீது நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து தாராபுரம் போலீசார் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து, தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: