கிராமத்திற்கு செல்ல பாதை விட்டு சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்

திருப்பூர், ஆக. 22: திருப்பூர் நிழலி கிராமத்திற்கு செல்ல பாதை விட்டு  சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்   பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். திருப்பூர் கொடுவாய் அருகே உள்ள நிழலி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நிழலி கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் பள்ளிகள், பால் சொசைட்டி உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில் இந்த கிராமம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கிராமத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு சென்டர் மீடியன்களை வைத்து குறுக்கு சாலையை மறைந்துள்ளனர். இதனால் எங்கள் ஊருக்குள் செல்வதற்கு சுமார் 3 கி.மீ., தொலைவு சுற்றி வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே எங்கள் நிழலி கிராமத்திற்கு செல்ல பாதை விட்டு அங்குள்ள சென்டர் மீடியனை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: