மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி

பொங்கலூர், ஆக. 22: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பொங்கலூர் வட்டார வளமையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் ஒருகிங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடந்தது. பொங்கலூர் பொ.உ.வெ.நாயுடு ஆரம்ப பள்ளி வளாகத்திலிருந்து துவங்கிய பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மஞ்சுமாதேவி முன்னிலை வகித்தார்.

இந்த பேரணியை பொங்கலூர் வட்டார கல்வி அலுவலர் பாமா கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி சக்தி நகர், பொங்கலூர் கடைவீதி, கோவை- திருச்சி ரோடு சென்று நிறைவடைந்தது.  இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர் பயிறுனர்கள், உடற்கல்வி இயக்குனர், இயன்முறை மருத்துவர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து  இன்று மாற்றுதிறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் பொங்கலூர், பொ.வெ.நாயுடு தொடக்க பள்ளியில் நடக்கிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

Related Stories: