அன்னூர் அருகே சாமி சிலை அவமதிப்பு

அன்னூர்,ஆக.22:அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாமடை கிராமத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த கருவண்ணராயர்,வீரசுந்தரி கோயில் உள்ளது.கடந்த 2008ம் ஆண்டு ஊர் மக்களால் இக்கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கருவறைக்குள் கருவண்ணராயர் சிலையை அமைத்தனர்.

 மேலும் கோயில் வளாகத்தினுள் தன்னாசியப்பர் சிலையையும் நிறுவினர். இக்கோயிலில் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை பூசாரி கோயிலுக்கு சென்று பார்த்தபோது தன்னாசியப்பர் சிலைக்கு அவமரியாதை செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சாமி சிலையை அவமதித்தது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் ஊர் பொதுமக்கள் கோயிலை கழுவி பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாமி சிலையை அவமதித்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: