திரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சேலம், ஆக.22: ஓமலூர் அருகே திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரியில், 9-வது பேட்ச்சின் பிஇ  முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தொழில்துறை வழிகாட்டுனர் மற்றும் புள்ளியியல் வல்லுனர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி தலைவர் திரஜ்லால் காந்தி பேசுகையில், ‘கல்வி என்பது தமது அறிவை மற்றவரிடத்து பகிர்ந்து கொள்ளவும், நிறைவான சமுதாய பணிகள் சிறப்பாக செய்யவும் பாலமாக அமைய வேண்டும். நவீன தொழில்நுட்பக் கருவிகளான செல்போன், லேப்டாப் போன்றவற்றை சரியாக பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை கற்க வேண்டும்,’ என்றார்.

துணை தலைவர் மனோஜ்குமார், செயலர் அர்ச்சனா மனோஜ்குமார், கல்லூரி முதல்வர் சரவணன்,  வேலை வாய்ப்பு இயக்குனர் பார்த்தசாரதி ஆகியோர், மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்புகளை பற்றி எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள், தங்களது இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, புதிய மாணவர்களை வரவேற்றனர். முன்னதாக கணினி துறைத்தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி மாணவர் சேர்க்கை அலுவலர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் விஜய் நன்றி கூறினார்.

Related Stories: