மாடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், ஆக. 22: கேரளா, கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக வியாபாரிகள் யாரும் வராததால், புதன்சந்தையில் நேற்று மாடுகள் விலை சரிந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்க, விற்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர். நேற்றை சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் மாடுகளை விற்பனைக்கு ஓட்டி வந்தனர்.

ஆனால், கனமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், சந்தையில் மாடுகள் விலை சற்று குறைந்தது. கடந்த வாரம் ₹25 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு,  இந்த வாரம் ₹22 ஆயிரத்திற்கும், ₹37 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு, ₹36 ஆயிரத்திற்கும், ₹8 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுக்குட்டி 7 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

Related Stories: