புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஆக.22: தொடர் மழை காரணமாக புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. தற்போது ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், ஆடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில், அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.

இதனால் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஆடு ₹4,800க்கு விற்பனையானது. இந்த வாரம் ₹4,900க்கு விற்பனையானது. கடந்த வாரம் 4,400க்கு விற்பனையான வளர்ப்பு ஆடுகள் இந்த வாரம் ₹4,600க்கு விற்றது. பிறந்து ஒரு மாதமே ஆன பெண்குட்டி ஆடு 1000 ரூபாய்க்கும், கிடாக்குட்டி 1100க்கும் விற்பனையானது.

Related Stories: