அரிசி வியாபாரி வீடு புகுந்து கொள்ளையடித்தவர் கைது

காரிமங்கலம், ஆக.22:காரிமங்கலம் அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியமிட்டஅள்ளியை சேர்ந்தவர் ராமு (47). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி இவரது மனைவி லதா, அவரது தாயாருடன் கோவைக்கு கண் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ராமு வியாபார ரீதியாக வெளியில் சென்றுள்ளார். அவரது மகன்கள் பரத், சியாம் ஆகியோர் கிரிக்கெட் விளையாட, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். பின்னர் பரத் வீட்டிற்கு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டு இருப்பதும், பீரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரது தந்தை ராமுவிற்கு போன் செய்து தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 15 லட்சம், 48பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தன் ேபரில், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காரிமங்கலம் போலீசார் கும்பாரஅள்ளி தேசியநெடுஞ்சாலை பிரிவில் ரோந்து சென்ற போது, வாலிபர் ஒருவர் தனியாக மது அருந்தி கொண்டிருந்ததை கண்டு விசாரித்ததுள்ளனர். அப்போது முன்னுக்கு பின்னாக அவர் பதில் அளித்ததில் சந்தேகம் அடைந்து, அவரை போலீஸ் ஸ்டேனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவேரிப்பட்டிணம் அடுத்த காவாப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(26), என்பதும், அரிசி வியாபாரி ராமுவின் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரில் இருந்த 48பவுன் நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: