காரிமங்கலம் அருகே வால்வில் கசியும் நீரை பிடித்து செல்லும் மக்கள்

காரிமங்கலம், ஆக.22: காரிமங்கலம் அருகே, கேத்தனஅள்ளி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், ஒகேனக்கல் குடிநீர் குழாய் வால்வில் கசியும் தண்ணீரை, பல மணி ேநரம் காத்திருந்து மக்கள் பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கேத்தனஅள்ளி, எலுமிச்சினஅள்ளி, முக்குளம் ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேத்தனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டூர், பட்டிக்காரன்கொட்டாய், உலகன்கொட்டாய், கரியன்கொட்டாய் மற்றும் எலுமிச்சனஅள்ளி, முக்குளம் ஊராட்சிகளின் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு, கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, கெட்டூர் பகுதியில் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் கசியும் தண்ணீரை, தொட்டிக்குள் இறங்கி பல மணி ேநரம் காத்திருந்து பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: