அதிகளவில் பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ பறிமுதல்

திண்டிவனம், ஆக. 22.  திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் மற்றும் ஊழியர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 3 நபர்கள் மட்டும் பயணிக்க வேண்டிய ஆட்டோவில் 21 நபர்களை ஏற்றி வந்ததும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாலிபர் ஆட்டோவை இயக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோவை போக்கு

வரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை ஹெல்மெட் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: